×

கும்பகோணம் பகுதிகளில் பாசன வாய்க்கால்கள், நீர் ஒழுங்கிகள் 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கும்பகோணம்: கும்பகோணம் அருகே மேலக்கோட்டையூர் சர்வமானிய கொட்டையூர் வாய்க்கால், காவிரியின் இடது கரையில் தொடங்குகின்ற பாசன வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்கால் மேலக்கோட்டையூர், கீழக்கொட்டையூர், மூப்பக்கோயில் வழியாக ஏரகரத்திற்கு நீர்ப்பாசனம் வெளியேற்றம் ஆகும். இதன் வழியே செல்லும் இதன் பாசனப்பரப்பு 513 ஏக்கர் கொண்டதாகும். இந்த வாய்க்காலில் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக ஒரு சொட்டு தண்ணீர் கூட எட்டிப் பார்க்கவில்லை எனவும், காவிரியின் இடது கரையில் திம்மகுடி வருவாய் கிராமத்தில் துவங்கி திம்மகுடி, பாபுராஜபுரம், ஏரகரம் ஆகிய கிராமங்களுக்கு பாசன வாய்க்காலாக இருக்கின்ற ஏரகரம் பாசன வாய்க்கால், சுமார் 520 ஏக்கர் பாசன பரப்பு கொண்டதாகும். இந்த பாசன வாய்க்கால் முழுமையாக தூர்ந்து போய் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு 35 ஆண்டுகளாக இந்த பாசன வாய்க்காலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட சாகுபடிக்கு கிடைப்பதில்லை. அதேபோன்று கீழக்கொட்டையூர் கிராமத்தில் காவிரியிலிருந்து தொடங்குகின்ற மூப்பக்கோவில் பாசன வாய்க்கால் சுமார் 300 ஏக்கர் சாகுபடி பரப்பை கொண்டதாகும். இந்த பாசன வாய்க்கால் மூலம் பயன் பெறுகின்ற கிராமங்கள் கீழக்கொட்டையூர், மூப்பக்கோவில், அசூர், பரட்டை ஆகிய கிராமங்களுக்கு பாசன வசதியை பெறக்கூடியது. இதிலும் கடந்த 35 ஆண்டுகளாக தண்ணீர் பாசனம் இல்லை.அதுபோல, சுமார் 300 ஏக்கர் பாசன பரப்பு கொண்ட பெருமாண்டி பாசன வாய்க்காலானது பெருமாண்டி, அசூர் மற்றும் பரட்டை கிராமங்களுக்கான பாசன வாய்க்கால் ஆகும். இந்த காவிரி ஆற்றில் தொடர்ந்து பல ஆண்டுகளாக விதிகளுக்கு புறம்பாக மணல் கடத்தல் நடைபெற்றதால், ஆற்றினுடைய மட்டம் குறைந்தது. மேற்கண்ட பாசன வாய்க்கால்களில் மட்டம் உயர்ந்து விட்டதால், வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்துபோயும், தனியார் நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்து வருகிறது. இந்த பாசன வாய்க்கால்கள் கல்லணைக்கும் பூம்புகாருக்கும் இடையேயான காவிரியின் நடுமடை பாசன வாய்க்கால்கள் ஆகும்.இந்த பாசன வாய்க்கால்களின் பிரிவு வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் மற்றும் கன்னி வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து போய் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் வரத்து தேவை வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து பலமுறை கலெக்டரிடமும், முதல்வர் தனிப்பிரிவிற்கும் தொடர்ந்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் அளித்திருந்தும் 35 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் இல்லை. விவசாயிகள் கோரிக்கையை பரிசீலனை செய்த தஞ்சாவூர் காவிரி வடிநில கோட்டம் நீர்வள ஆதாரத்துறை, இந்த பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றால் கீழக்கொட்டையூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைப்பதற்கு அரசிற்கு கடந்த 2021 பிப்ரவரி 9 அன்றைய கடிதத்தின்படி நீர் ஒழுங்கி கட்டுவதற்கான மதிப்பீடு ரூ. 18.52 கோடிக்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முன்மொழிவினை மாநில உயர் அலுவலர்களுக்கு அனுப்பியிருந்து அனுமதி பெற்றும், அந்த பணி இந்த ஆண்டு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என விவசாயிகள் மிகுந்த வருத்தம் தெரிவித்தனர்.மேலும் பழவாற்றில் இருந்து 543 ஏக்கருக்கு பாசன வசதி பெறுகின்ற கொன்னடி வாய்க்கால் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்த வாய்க்கால் 2018ல் கடந்த ஆட்சியில் தரமற்ற நிலையில் கட்டியதால் 2 ஆண்டுகளிலேயே தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு வலுவிழந்து போனது. இந்த நீர் பாசனம் திம்மகுடி, ஏரகரம், பாபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அடங்கியது ஆகும். இதில் 300 ஏக்கருக்கு நீர் ஒழுங்கி சரியில்லாத காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளாக நீர்ப்பாசனம் இல்லை. இதனை சரி செய்யப்படாத காரணத்தால் நீர்ப்பாசனம் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை 2 நாள் பயணமாக தமிழக முதல்வர் பார்வையிட்டு வருகிறார். எனவே 35 ஆண்டுகளாக ஒரு சொட்டு தண்ணீர் கூட எட்டிப் பார்க்காத இந்த பாசன வாய்க்கால்களை முதல்வர் நேரில் வந்து பார்வையிட்டால் விவசாயிகளுக்கு விடியல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பாக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.300 ஏக்கர் பாசன பரப்பு கொண்ட பெருமாண்டி பாசன வாய்க்காலானது பெருமாண்டி, அசூர் மற்றும் பரட்டை கிராமங்களுக்கான பாசன வாய்க்கால் ஆகும். இந்த காவிரி ஆற்றில் தொடர்ந்து பல ஆண்டுகளாக விதிகளுக்கு புறம்பாக மணல் கடத்தல் நடைபெற்றதால், ஆற்றினுடைய மட்டம் குறைந்தது.பழவாற்றில் இருந்து 543 ஏக்கருக்கு பாசன வசதி பெறுகின்ற கொன்னடி வாய்க்கால் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்த வாய்க்கால் 2018ல் கடந்த ஆட்சியில் தரமற்ற நிலையில் கட்டியதால் 2 ஆண்டுகளிலேயே தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு வலுவிழந்து போனது….

The post கும்பகோணம் பகுதிகளில் பாசன வாய்க்கால்கள், நீர் ஒழுங்கிகள் 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Melakottaiyur ,Sarvamaniya Kottayur ,Cauvery ,Dinakaran ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...