×

பாஜ நிர்வாகி கார் மோதி அரசு அதிகாரி பலி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காட்டை சேர்ந்தவர் முருகன் (38). இவர் திருப்புவனம் யூனியனில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி மலையம்மாள். இவர் மதுரை நகரில் போலீசாக பணியாற்றி வருகிறார். இதனால் இருவரும் மதுரை ரிசர்வ் லயனில் உள்ள போலீஸ் குவார்ட்டர்சில் வசித்து வந்தனர். நேற்று இரவு திருப்புவனத்தில் இருந்து, மதுரைக்கு முருகன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். திருப்புவனம் வடகரையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் திருப்புவனம் மேற்கு ஒன்றியத் தலைவராக உள்ளார். இவர் தனது காரில் மானாமதுரையில் இருந்து 4 வழிச்சாலை வழியாக திருப்புவனத்திற்கு வந்து கொண்டிருந்தார். திருப்பாச்சேத்தி அருகே கொத்தங்குளம் விலக்கு பகுதியில், சாலை திருப்பத்தில் எதிரே வந்த முருகனின் டூவீலர் மீது, இவரது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டூவீலரை ஓட்டி வந்த  முருகன்(38), படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்த பாஜ பிரமுகர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பாஜ நிர்வாகி கார் மோதி அரசு அதிகாரி பலி appeared first on Dinakaran.

Tags : Baja ,Sivagangai ,Murugan ,Aavaranga ,Sivagangai District Tirupachchetti ,Union of Divyanam ,
× RELATED பெண் காவலரை தரக்குறைவாக பேசிய பாஜ நிர்வாகி கைது