×

மும்பை ரயில் 2 தினங்களாக 12 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி

நெல்லை: மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் கடந்த 2 தினங்களாக 12 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வருவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே- குர்துவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே பணிகள் நடப்பதால் மும்பை ரயில்கள் தற்போது மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ்(எண்.16339) இதனால் புறப்படுவதில் காலதாமதம் ஏற்படுவதோடு, மாற்றுப்பாதையில் வருவதால் தினமும் காலதாமதம் ஆகி வருகிறது. கடந்த 2 தினங்களாக காலை 8.20 மணிக்கு நெல்லை வந்து சேருவதற்கு பதிலாக, இரவு 9.30 மணிக்கு நெல்லைக்கு வந்து செல்கிறது. சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதமாக வருவதால், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் பகுதிகளில் இறங்க வேண்டிய பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூடுதல் நேர பயணம் காரணமாக பயணிகள் பொறுமை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் மறுமார்க்கத்தில் புறப்பட்டு செல்ல வேண்டிய நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலும் காலை 8 மணிக்கு நெல்லை வருவதற்கு பதிலாக, 11.15 மணிக்கு வந்து மும்பை புறப்பட்டு சென்றது….

The post மும்பை ரயில் 2 தினங்களாக 12 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Nellai ,Nagarcoil Express ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!