×

ரியல் மாட்ரிட் சாம்பியன்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனலில் இங்கிலாந்தின் லிவர்பூல் அணியுடன் மோதிய ரியல் மாட்ரிட் அணி (ஸ்பெயின்) 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்று 14வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த அணியின் வினிசியஸ் ஜூனியர் 59வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் திபாட் கோர்ட்டாய்ஸ், லிவர்பூல் நட்சத்திர வீரர் முகமது சாலாவின் 6 கோல் முயற்சிகளை முறியடித்தது குறிப்பிடத்தக்கது. கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர் ரியல் மாட்ரிட் வீரர்கள்….

The post ரியல் மாட்ரிட் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Real Madrid ,Spain ,England ,Liverpool ,European Champions League football ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...