×

எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மதசார்பற்ற, சமூக நீதியை பின்பற்றும் கல்லூரியாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மதச்சார்பின்மையின் மறு உருவமாக சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரிக்கு A++ தரச்சான்றிதழை கல்லூரி முதல்வரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் மாணவிகள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், பெண்களுக்கான கல்லூரியாக எஸ்.ஐ.இ.டி. கல்லூரி திகழ்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 3 மகளிர் கல்லூரி விழாக்களில் பங்கேற்று இருக்கிறேன். தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு முறையும் நான் இந்த கல்லூரிக்கு வாக்களிக்க வருவேன். என்னுடைய வெற்றிக்கான வாக்கினை செலுத்திய இந்த கல்லூரியில்தான் இன்று உங்களை சந்திக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மதசார்பற்ற, சமூக நீதியை பின்பற்றும் கல்லூரியாக எஸ்.ஐ.இ.டி. கல்லூரி செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 7,500 மாணவிகள் பயிலும் கல்லூரியில் 50 சதவீதம் இஸ்லாமியர், 50 சதவீதம் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவிகள் பயில்கின்றனர். இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களின் கல்விக்காக உழைக்கும் கல்லூரி இது. திமுக ஆட்சிக்காலத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. NAAC அமைப்பால் A++  தகுதி பெற்றமைக்கு எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு வாழ்த்துக்கள். பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் சுய உதவிக்குழு திட்டம் கொண்டுவரப்பட்டது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் இந்த கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். விழாவில் அமைச்சர் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர். …

The post எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மதசார்பற்ற, சமூக நீதியை பின்பற்றும் கல்லூரியாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : S.I.E.T. ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M. K. Stalin ,Chennai Thenampet ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...