×

சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா

லாஸ் ஏஞ்சல்ஸ்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, கடந்த 40 வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக சினிமாவில் இயங்கி வருகிறார். திரையுலகில் அவர் செய்த சாதனைகளைப் பாராட்டி, இந்தியாவின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்காக சிரஞ்சீவியைக் கவுரவிக்கும் வகையில், அமெரிக்காவில் வசிக்கும் அவரது ரசிகர்கள் பிரமாண்டமான விழா நடத்தினர். பீப்புள் மீடியா பேக்டரி சிஇஓ விஸ்வ பிரசாத் நடத்திய இவ்விழா, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள டானா பாயின்ட் ரிட்ஸ் கேரிட்டானில் நடந்தது. ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்களும், சிரஞ்சீவி ரசிகர்களும் கலந்துகொண்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் தொழிலதிபர் இம்தியாஸ் ஷெரீப், விழா ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்.

The post சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : United States ,Cinderella ,Los Angeles ,Chiranjeevi ,Union Government ,India ,Padma Vibhushan ,Shiranjeev ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு!