×

நேபாளத்தின் பொக்காராவிலிருந்து 19 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் மாயம்; 4 இந்தியர்கள் பயணம்?

நேபாளம்; பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாயமாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்மாண்டு, நான்கு இந்தியர்கள் உட்பட 19 பயணிகளை ஏற்றிச் சென்ற நேபாள விமானம், இன்று காலை கட்டுப்பாட்டு அறையின் தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். முன்னதாக தாரா ஏர் நிறுவனத்தின் 9 NAET இரட்டை எஞ்சின் விமானம், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள பொக்ராவிலிருந்து, வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு காலை 9.55 மணியளவில் புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமானம் கட்டுபாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், காணாமல் போன விமானத்தில் நான்கு இந்தியர்கள் மற்றும் மூன்று ஜப்பானியர்கள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீதமுள்ளவர்கள் நேபாள குடிமக்கள் மற்றும் விமானத்தில் பணியாளர்கள் உள்பட 19 பயணிகள் இருந்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஜோம்சோம் விமான நிலையத்தின் ஏடிசியின் படி, கடைசியாக தொடர்பில் இருந்த பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post நேபாளத்தின் பொக்காராவிலிருந்து 19 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் மாயம்; 4 இந்தியர்கள் பயணம்? appeared first on Dinakaran.

Tags : Tara Air ,Pokhara, Nepal ,Nepal ,Pokhara ,Jomsom ,Kathmandu ,Dinakaran ,
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...