×

மேடையில் பாடும்போதே பிரபல பாடகர் மரணம்: கேரளாவில் பரிதாபம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பிரபல பாடகர் பஷீர் மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கேரள மாநிலம், கொல்லம் அருகே இடவா பகுதியை சேர்ந்தவர் பஷீர் (78). பழம்பெரும் மேடைப் பாடகர். இவர் மலையாள சினிமாவில் ஜானகி, வாணிஜெயராம் உள்பட முன்னணி பாடகிகளுடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் விழா மற்றும் நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வந்தார். இந்நிலையில் நேற்று பஷீர் ஆலப்புழாவில் ஒரு பிரபல இசை நிறுவனத்தின் பொன்விழா ஆண்டையொட்டி மேடையில் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தபோது திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பஷீர் மரணமடைந்தார். மாரடைப்பு ஏற்பட்டது தான் மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறினர். மேடையில் பாடல் பாடிக் கொண்டிருந்த போதே பாடகர் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் ேசாகத்தில் ஆழ்த்தியுள்ளது….

The post மேடையில் பாடும்போதே பிரபல பாடகர் மரணம்: கேரளாவில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Basheer ,Kerala… ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...