×

செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் தொடர் பிரக்ஞானந்தாவுக்கு 2வது இடம்

சென்னை: உலகின் முன்னணி வீரர்கள் 16 பேர் பங்கேற்ற  ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’  செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன்  சதுரங்கப் போட்டி  பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய சென்னை வீரர்  பிரக்ஞானந்தா (16 வயது), உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் உள்பட நட்சத்திர வீரர்களை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் அவர் உலகின் 2ம் நிலை வீரரான  டிங் லிரெனுடன் (29 வயது, சீனா) மோதினார். முதல் செட்டை டிங் லிரென் 2.5-1.5 என்ற கணக்கில் கைப்பற்ற, 2வது செட்டில் அபாரமாக விளையாடிய பிரக்ஞானந்தா 2.5-1.5 என வென்று பதிலடி கொடுத்தார். இருவரும் சமநிலை வகித்ததால் 2 ஆட்டம் கொண்ட டை பிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டது. முதல் ஆட்டம் டிரா ஆன நிலையில், 2வது ஆட்டத்தில் லிரென் 49 நகர்த்தல்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு முதல் பரிசாக ₹20 லட்சமும், 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ₹12 லட்சமும் வழங்கப்பட்டது.+1 தேர்வுக்கு இடையே சர்வதேச செஸ் போட்டியிலும் கலந்துகொண்டு சளைக்காமல் போராடி 2வது இடம் பிடித்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. …

The post செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் தொடர் பிரக்ஞானந்தாவுக்கு 2வது இடம் appeared first on Dinakaran.

Tags : Sessepal Masters Series ,Praggnantha ,Chennai ,Meltwater Champions Chess Tour Series' ,Sessabel Masters ,Prakhanantha ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?