×

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி.தினகரன் கோரிக்கை

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என காரணம் காட்டி காலம் தாழ்த்தி வருவதால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியமின்றி செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து உரிய ஊதியம் அவர்களுக்கு கிடைப்பதற்கு அரசு வழிசெய்ய வேண்டும். …

The post அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி.தினகரன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : DTV ,Dinakaran ,Chennai ,Amadam ,Secretary General ,Twitter ,Tamil Nadu ,
× RELATED தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி...