- டகோட்டா ஜான்ச
- சிட்னி ஸ்வீனி
- செலஸ்டி ஓ'கானர்
- இசபெல்லா மெர்செட்
- தஹெர் ரஹீம்
- மார்வெல்
- கொலம்பியா படங்கள்
- மார்வெல் என்டர்ட
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள மார்வெல் சூப்பர் வுமன்படம் “மேடம் வெப்” திரைப்படத்தில் டகோடா ஜான்சன், சிட்னி ஸ்வீனி, செலஸ்டி ஓ’கானர், இசபெலா மெர்சிட் மற்றும் தஹர் ரஹீம் உட்பட பலர் நடித்துள்ளனர். பிறக்கும் முன்பே தன் குழந்தைக்கு நரம்பு சார்ந்த பிரச்னை இருப்பது சிகிச்சையில் தெரிந்துக்கொள்ளும் தாய் ஒருவர் விசித்திர சிலந்தியை தேடி, அமேசான் காட்டுக்கு செல்கிறார். நீண்ட தேடுதலுக்கு பின் அந்த சிலந்தியை பிடிக்க, அவருக்கு காவலராக இருந்த நபரே துப்பாக்கியால் சுட்டு விட்டு சிலந்தியுடன் தப்பிக்கிறார். இந்நிலையில் அவர் தேடிச் சென்ற சிலந்தியின் சக்தியும் அந்தப் பெண்மணிக்குக் கிடைக்க குழந்தையைப் பெற்ற பின் அப்பெண் இறந்து விடுகிறார்.
அப்படிப் பிறந்த குழந்தைதான் மேடம் வெப். பல வருடங்கள் கழித்து தனக்கு இப்படி ஒரு சக்தி இருப்பதே தெரியாமல் ஆம்புலன்ஸ் ஓட்டிநராக வேலை செய்து வருகிறார் மேடம் வெப் கேரக்டரில் இருக்கும் டகோடா ஜான்சன். வேலைக்கு இடையே இவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொண்டு அதன் மூலம் நடக்கவிருக்கும் சில ஆபத்துகளை தடுக்கவும், மூன்று டீனேஜ் பெண்களை பாதுகாக்கும் பொறுப்பும் மேடம் வெப்புக்கு தேடி வருகிறது. வழக்கமான மார்வெல் ஸ்டைல் ஆக்ஷன், அதிரடி, மாஸ் காட்சிகளுடன் படம் நிச்சயம் பெண் ரசிகர்களை கொண்டாட வைக்கும். போலவே டகோடா ஜான்சனுடன் இணைந்து அம்மூன்று டீனேஜ் பெண்களும் காட்டும் வித்தைகள், சண்டைகள், என கண்களுக்கு விருந்துதான்.
மௌரே ஃபியோரே ஒளிப்பதிவும், ஜோஹன் சோடர்க்விஸ்ட் இசையும் படத்துக்கு பலம். எனினும் டகோடா ஜான்ஸன் , மற்றும் சிட்னி ஸ்வீனியின் முந்தைய படங்கள் கண் முன் வந்து செல்வதால் இந்த உலகைக் காக்கும் கேரக்டரில் சற்று டொங்கல் போல்தான் தெரிகிறார். சிலந்திகள் உலகில் பெரும்பாலும் ஆண்களே ஆண்டுகொண்டு பெண் கேரக்டர்களுக்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக இடமளித்துக் கொண்டிருந்த நிலையில் இந்தப் படம் முழுக்க முழ்க்க ஸ்பைடர் பெண் கதாபாத்திரத்தை மையகாகக் கொண்டு எடுக்கப்பட்ட விதத்தில் தவறவிட முடியாத படமாக மாறியிருக்கிறது.
The post மேடம் வெப் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.