×

மாகரல் கிராமத்தில் இடி தாக்கி 9 ஆடுகள் பலி

ஊத்துக்கோட்டை:  திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அடுத்த மாகரல் கண்டிகை ஊராட்சி மேட்டு காலனி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரசு (48). இவர்கள், 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை சரசு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றிருந்தார். அப்போது, பிற்பகல் 2 மணி அளவில் வெப்பச்சலனம் காரணமாக திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மழைக்காக மரத்தடியில் சரசு ஒதுங்கி இருந்தார். அப்போது, திடீரென இடி தாக்கியதில் 9 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. இதுகுறித்து தகவலறிந்த மாகரல் கால்நடைத்துறை மருத்துவர் வனிதா, கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் குமுதா செல்வம் ஒன்றிய கவுன்சிலர் குழந்தைவேல் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர், கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே ஆடுகளை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது….

The post மாகரல் கிராமத்தில் இடி தாக்கி 9 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Macaral ,Thiruvallur District ,Ellapuram Union Vengal ,Makaral Kandy Rudadhi Madu Colony Village Elthumalai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...