×

மாநில தலைவர் பதவி யாருக்கு என்பதில் ஆர்வமாயிருக்கும் கதர் கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கப்சிப் என மவுனம் காக்கிறார்களாமே கதர் சட்டைகள்…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘கதர்  கட்சியில் இப்போதைய மாநில தலைவரின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில்  அவரே ஒரு பெண்மணிக்கு கதர் கட்சியின் மாநில தலைவர் வாய்ப்பு கிடைக்கும்  என்று சொல்லி வருகிறார். அப்படி ஒரு மாற்றம் வந்தால் ஏற்கனவே வேலூர் உட்பட  மூன்று மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைவர்கள் உட்பட பொறுப்பாளர்களின்  பதவிகளுக்கும் ஆபத்து வரும் என்பதால், ஏற்கனவே கோஷ்டியாக இயங்கி வரும்  பெருந்தலைகள் எல்லாம் யார் அந்த பெண் தலைவர் என்ற ஆராய்ச்சியில்  இறங்கியிருக்கிறார்களாம்.  இதில் ஒரு சிலர் மட்டும் எதுக்கு வம்பு,  தலைவர் வாய்ப்பு வரலாம் என்ற பட்டியலில் கூறப்படும் தென்கோடி மாவட்டத்தை  சேர்ந்த பெண்மணியையும், மத்திய மாவட்டத்தை சேர்ந்த ஒளிமயமான பெண்மணியையும்  இப்போதே தனித்தனியாக மொய்க்க தொடங்கி விட்டார்களாம். இதனால் மூன்று  மாவட்டங்களிலும் கதர் கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சியும் சமீப நாட்களில்  நடத்தப்படாமல் நிர்வாகிகள் கப்சிப் மனநிலையில் இருந்துவிட்டார்கள்  என்பதுதான் அந்த கட்சி தொண்டர்களின் முணுமுணுப்பாக உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘அல்வா மாவட்டத்துல சிட்டிக்கு  வெளியே மகாராணியின் பெயரோடு செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில என்ன  பிரச்னையாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இந்த  கல்லூரியில ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிச்சிட்டு வாராங்க.  செமஸ்டர் தேர்வு நெருங்கி வர்ற வேளையில கல்லூரி ஹாஸ்டல்ல நடக்கிற  கூத்ததுகளால, மாணவிகள் எல்லாம் தலைத்தெறிக்க ஓடுறாங்களாம். 500க்கும்  மேற்பட்ட மாணவிகள் தங்கியிருக்கிற ஹாஸ்டல்ல, சமையலுக்கு போதிய ஆளில்லை. வேற  வழியில்லாம ஹாஸ்டல் நிர்வாகம் செக்யூரிட்டிய கொண்டு போயி சமையல் வேலைக்கு  வைச்சிருக்கு. ஆனால் அங்க போன செக்யூரிட்டி படிக்க வந்த பிள்ளைங்ககிட்ட  பாலியல் சீண்டலில் ஈடுபட, மாணவிகள் எல்லாரும் பொங்கி எழுந்துட்டாங்க.  கல்லூரி  நிர்வாகத்திடம் ஒட்டுமொத்தமா போய் மாணவிகள் புகார் செஞ்சதும், கல்லூரி  விடுதிய 4 நாளைக்கு இழுத்து மூடிட்டாங்களாம். பின்னாடி கல்லூரி விடுதிய  திறந்தாலும், பாதிக்கு பாதி மாணவிகள் ஹாஸ்டல் பக்கமே எட்டி பாக்கலையாம்.  செமஸ்டர் தேர்வு நெருங்கி வர்ற வேளையில இப்படி நிம்மதியா தங்கி படிக்க  விடாம படிப்புல மண்ணள்ளி ேபாட்டுட்டாங்களே என மாணவிகள் எல்லாம்  புலம்பிக்கிட்டு, வெளியில இருந்து காலேஜிக்கு வந்துட்டு போறாங்களாம்’’  என்றார் விக்கியானந்தா. அதிகாரி கொர்….அரிசி கடத்தல் ஜோர்…! கோவை   மதுக்கரை காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரியும் ‘’கவி’’ என்னும் பெயர்  கொண்ட ஒரு காவல் அதிகாரி, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுடன்  மிகவும் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளார். இவருக்கு கொடுக்கவேண்டிய மாமூல்  தொகையை முறையாக கொடுத்துவிட்டால், எல்லை தாண்டி ரேஷன் அரிசி மூட்டைகள் மிக  எளிதாக சென்றுவிடுகின்றன. கிரீன் சிக்னல் தானாகவே ஓப்பன் ஆகிவிடுகிறது.  ரேஷன் அரிசி கடத்தலில், குற்றவாளிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால்,  அவ்வப்போது கோஷ்டிபூசல் வெடிக்கிறது. இந்த கோஷ்டிபூசல் உச்சத்தில் சென்ற  காரணத்தால், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுக்கரை  தம்பாகவுண்டன்பாளையத்தில் ராமு என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவரது  இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு, ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள்  மொத்தமாக வந்திருந்தனர். இந்த கும்பலிடம், அந்த எஸ்ஐ ஜாலியாக பேசியது  மட்டுமின்றி, அவர்களது தோளில் கைபோட்டு சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். இதை  பார்த்த ஊர் மக்களுக்கு கோபம் கொப்பளித்தது. எஸ்ஐயை சுற்றிவளைத்து வசைபாட  துவங்கிவிட்டனர். ‘’திருடனை பிடிக்க வேண்டியவரே அவர்களோடு கொஞ்சி  உறவாடும்போது, திருடனை எப்படி பிடிக்கமுடியும்?’’ என சரமாரியாக கேள்வி  எழுப்பினர். நிலைமை விபரீதமாகி செல்வதை உணர்ந்த அந்த எஸ்ஐ அங்கிருந்து  நைசாக நழுவிவிட்டார்.‘‘குமரி மாவட்டத்துல என்ன விவகாரம்..’’ ‘‘இரணியல் அருகே ஆட்டோ  ஒன்றின் மீது சிமென்ட் கலவை கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. தாறுமாறாக வந்த லாரி அவ்வழியே வந்த பைக் ஒன்றின்  மீதும், ஆட்டோவின் மீதும் மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 5 பேர் குதித்து  லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி கவிழ்ந்ததில் ஆட்டோ  அப்பளம்போல் நொறுங்கியது. விபத்தில் சிக்கிய ஆட்ேடாவின் டிரைவர் இரணியல்  காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது இது தொடர்பாக ஏற்கனவே  வழக்குபதிவு செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் தகவல்  அறிக்கையை வாங்கி பார்த்தபோது அதிர்ச்சி. பைக் ஓட்டி சென்றவரிடம் இருந்து  மனுவை பெற்று எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். ஆனால் விபத்தில் சிக்கிய  ஆட்டோவுக்கு பதில் ஏதோ ஒரு ஆட்டோவின் பெயரை போட்டு எப்.ஐ.ஆர்  போட்டுவிட்டார்கள். விபத்தில் சிக்கியவர்களின் பெயரையும் முழுமையாக  சேர்க்கவில்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக முறையிட போலீசார்  கண்டுகொள்ளாததால் எஸ்.பி.யை சந்தித்தும் மனு கொடுத்துள்ளார்கள் ஆட்டோ  டிரைவர் தரப்பினர்’’ என்றார் விக்கியானந்தா. …

The post மாநில தலைவர் பதவி யாருக்கு என்பதில் ஆர்வமாயிருக்கும் கதர் கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Qadar party ,wiki ,Khatar ,Uncle ,Peter ,Khadar party ,Dinakaran ,
× RELATED எம்பி தேர்தல் நடக்க இருக்கும்...