சென்னை: ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை தொடர்ந்து சஞ்சனா நடராஜன் நடித்துள்ள படம், ‘போர்’. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ரிஷிகா என்ற மருத்துவ மாணவியாக நடித்துள்ளேன். இந்த கேரக்டர், என் நிஜ கேரக்டர் போலவே இருக்கிறது. நண்பர்களுக்கு இடையே கதை நடக்கிறது. அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை சொல்வது மட்டுமின்றி, அரசியல் விஷயங்களையும் மற்றும் சில சமூக பிரச்னைகளையும் பற்றி அலசுகிறது.
டைரக்டர் பிஜாய் நம்பியார் தெளிவான பார்வையுடன் இப்படத்தை கொண்டு சென்றுள்ளார். ரிஷிகா கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருப்பது போலவே ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நிஜ சம்பவங்களின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார்.
The post மருத்துவ மாணவியாக மாறிய சஞ்சனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.