×

மொட்டையடித்து புத்த மதத்துக்கு மாறிய நடிகை

பெங்களூரு: பாலிவுட்டில் 1990களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பர்க்கா மதன். 1996ம் ஆண்டு வெளியான ’கிலாடியோன் கா கிலாடி’ என்ற நடிகர் அக்‌ஷய்குமார் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார் பர்க்கா மதன். அதன் பிறகு, இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அவர் நடித்த ’பூட்’ திரைப்படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. படங்கள் மட்டுமல்லாது 1857 கிராந்தி, கர் ஏக் சப்னா, சாத் பெரே – சலோனி கா சஃபர் மற்றும் நியாய் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். நடிப்புத் துறைக்குள் வருவதற்கு முன்பு பல வருடங்கள் மாடலிங் துறையில் இருந்தார் பர்க்கா மதன்.

அப்போது 1994ம் ஆண்டு நடைபெற்ற ’மிஸ் இந்தியா’ போட்டியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருடன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுஷ்மிதா சென் வெற்றி பெற்றார். இவர் நடிப்பை விட்டு விலகுவதாகவும் புத்த மதத்தைத் தழுவப் போவதாகவும் அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லாமா ஜோபா ரின்போச்சியின் கீழ், பர்கா மதன் கர்நாடகாவில் உள்ள செரா ஜெய் மடாலயத்தின் ஹர்டாங் காங்செனில் புத்த துறவியாக ஆனார் மற்றும் அவரது பெயரை வென் கைல்டென் சம்டென் எனவும் மாற்றிக்கொண்டார்.

The post மொட்டையடித்து புத்த மதத்துக்கு மாறிய நடிகை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bengaluru ,Barkha Madan ,Bollywood ,Akshay Kumar ,Ram Gopal Varma ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...