×

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே உள்ள சன் பார்மா நிறுவன விரிவாக்க பணிக்கு இடைக்கால தடை: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே உள்ள மருந்து தயாரிக்கும் சன் பார்மா நிறுவனத்தின் விரிவாக்க பணிக்கு இடைக்கால தடை விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே மருந்து தயாரிக்கும் நிறுவனமான சன் பார்மா இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கூடுதலாக மருந்து உற்பத்தி செய்வதற்கான விரிவாக்க பணிக்காக சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு 3.7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சரணாலயம் சுற்றி உள்ள 5 கி.மீ பரப்பளவும் சரணாலயமாக கருதப்படுவதாக தமிழ்நாடு அரசு 1998ம் ஆண்டு அறிவித்துள்ளது. மேலும் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் ஏதேனும் கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றால் தேசிய வன உயிர் வாரியத்தின் அனுமதி அவசியம் என விதிகள் உள்ள நிலையில் சன் பார்மா நிறுவனம் இதுவரை வன உயிர்  வாரியத்தின் அனுமதி பெறவில்லை. எனவே, பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் விரிவாக்க பணிக்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தியாகராஜன் என்பவரால் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு, நீதித்துறை உறுப்பினர் புஸ்பா சத்யநாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் சன் பார்மா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதிக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் அதுவரை தற்போது உள்ள நிலையிலேயே விரிவாக்க பணி நிறுத்தப்பட வேண்டும் எனவும் விசாரணைக்காக வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர். …

The post வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே உள்ள சன் பார்மா நிறுவன விரிவாக்க பணிக்கு இடைக்கால தடை: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sun Pharma ,Vedantangal Bird Sanctuary ,Southern National Green Tribunal ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வர்த்தகம் தொடங்கியபோது சரிவில்...