×

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி தேவாரம் பாடிய தமிழ் அமைப்பினர்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களாக ஏராளமான பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தெய்வத்தமிழ் பேரவை அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினர். முன்னதாக கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் பாதுகாப்புடன் கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினரும், அவர்களுடன் வந்த சிவனடியார்களும் கனகசபை மீது ஏறி தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினர். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தஞ்சை மணியரசன், பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பின்னர்தஞ்சை மணியரசன் கூறுகையில், கனகசபையில் தேவாரம் பாடும் இடத்தில் தீட்சிதர்களின் கெடுபிடி அதிகமாக இருக்கிறது என்றார். …

The post சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி தேவாரம் பாடிய தமிழ் அமைப்பினர் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja Temple Kanakasabha ,Chidambaram ,Cuddalore District ,Chitambaram Nataraja Temple ,Kanakasabha ,Dikshitars ,Chidambaram Nataraja Temple ,
× RELATED கடன் தொகைக்காக பெண்ணை வெளியே அனுப்பி...