×

தொரவளூர் குளத்தின் ஆக்கிரமிப்பு அகற்றம்-ஊராட்சி துறையினர் நடவடிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே உள்ள தொரவளூர் ஊராட்சியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் வேம்படையான் குளம் அமைந்துள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வந்ததோடு பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குளத்திற்கு சொந்தமான சில பகுதிகளை தனிநபர் சிலர் ஆக்கிரமித்து குளத்திற்கு நீர்வரத்து வர வழி இல்லாமலும், குளத்தின் பரப்பளவு குறைந்தும் இருந்து வந்தது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களில் பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர்.   இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, வேம்படையான் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதியை மீட்கும் பணி விருத்தாசலம் ஊராட்சி துறை நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா, ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்த பகுதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  …

The post தொரவளூர் குளத்தின் ஆக்கிரமிப்பு அகற்றம்-ஊராட்சி துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thoravalur Pond ,Vimpadayan Pond ,Thoravalur ,Vrutchasalam ,Dharavaluru Pond ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருள் விற்ற கடைக்கு சீல்