×

கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அமைவுள்ள சூழல் சுற்றுலா மையம், காட்சி முனையில் வனத்துறை அமைச்சர் ஆய்வு

கோத்தகிரி :  மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த  20ம் தேதி நடைபெற்ற 124வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்து,  நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டி 200 துவக்க விழாவில் பங்கேற்று பேசிய போது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள புதிய சுற்றுலா தலங்களை உருவாக்கும் வகையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலா மையமாக அறிவிக்கப்படும்.  தமிழ்நாட்டில் 23.3 சதவீதமாக உள்ள வனப்பகுதியை 30 சதவீதமாக விரிவுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது.கோத்தகிரியில் இயற்கை வளம் கொண்ட நீலகிரி சோலை மரங்களை கொண்ட வனப்பகுதியாக அமைந்துள்ள கோத்தகிரி பெரிய சோலை வனப்பகுதியில் வனவியல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.இதனைத்தொடர்ந்து தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வனத்துறை உயர் அதிகாரிகளுடன் கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட உள்ள சூழல் சுற்றுலா மையம் மற்றும் காட்சி முனைகளை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் உயர்கோபுர காட்சி மாடம் அமைக்கப்பட உள்ள பகுதியை  நேரில் ஆய்வு மேற்க் கொண்டார். ஆய்வின் போது கோத்தகிரி பேரூராட்சி துணை தலைவர் உமாநாத், முதுமலை புலிகள் காப்பகம் இயக்குநர் வெங்கடேஷ் மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் உட்பட வனத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அமைவுள்ள சூழல் சுற்றுலா மையம், காட்சி முனையில் வனத்துறை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Eco-Tourism Center ,Catherine Falls ,Forest Minister ,Kotagiri ,exhibition ,Nilgiris ,tourism ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் 2024: உணர்ச்சிவசப்பட்ட...