×

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி வருவாய் கோட்ட தாலுகாவிற்குட்பட்ட நகர் மற்றும் ஒன்றிய கிராம குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கப்பட்டது. இப்பணி தொடர்ந்து 10நாட்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட  பொள்ளாச்சி தாலுகா நகர் மற்றும் வடக்கு, தெற்கு ஒன்றியம். ஆனைமலை  ஒன்றியம், கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவதற்காக, கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் துவங்கப்பட்டது.  பள்ளி செல்லா குழந்தைகள் 6 வயது முதல் 15 வயது வரையிலும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 5 முதல் 18 வரையுள்ள குழந்தைகளையும் கணக்கெடுப்பு பணியில் ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் வீடு, வீடாக நேரடியாக சென்று ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வரும் ஜூன் 1ம் தேதி வரை என தொடர்ந்து 10நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து வட்டார வளமைய அதிகாரிகள் கூறுகையில், ‘இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில், பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை என்ற நோக்கத்தில்  இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. நகராட்சி மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள கிராம பகுதிகளில் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாவிற்குட்பட்ட நகர், கிராமபுறங்களில் என சுமார் 500க்கும் மேற்பட்ட பகுதிகளில்  பள்ளிச்செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்பணியை ஜூன் 1ம் தேதியுடன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் உள்ள குழுவினர் நேரடியாக சென்று தொடர்ந்து ஈடுபடுவார்கள். இப்பணி நிறைவடைந்ததும், பள்ளி செல்ல குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் எத்தனை என்பது குறித்து தெரிவிக்கப்படும்’ என்றனர்….

The post பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Cella ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச...