×

துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. துணிச்சலான வீர சாகச செயல் புரிந்த பெண்கள் http://awards.tn.gov.in என்ற இளையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது’ ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5.00 இலட்சத்திற்கான வரைவு காசோலை,  சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த,  துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த  பெண் விண்ணப்பதாரர் மட்டுமே  இவ்விருதினைப்  பெறத்  தகுதியுள்ளவர்.2022-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009 அவர்களுக்கு அல்லது https://awards.tn.gov.in/  என்ற இணைய தளம் மூலமாக 30.06.2022-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.  விருதுபெறத் தகுதியுள்ளவர்,  இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட  தேர்வுக் குழுவால்  தேர்வு செய்யப்படுவர்….

The post துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்