- ஷக்தி
- சங்கர் மகாதேவன்
- லாஸ் ஏஞ்சல்ஸ்
- சங்கர் மகாதேவன்
- செல்வகனேஷ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தி ரெக்கார்டிங் ஏகேடெ
- ஐக்கிய மாநிலங்கள்
- சக்தி பேண்ட்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
லாஸ்ஏஞ்சல்ஸ்: தமிழகத்தை சேர்ந்த சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் உள்பட இந்திய இசைக்குழுவினர் கிராமி விருதை வென்று சாதித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த தி ரெக்கார்டிங் அகாடமி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த ‘சக்தி’ இசைக்குழுவுக்கு சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த இசைக்குழுவின் சமீபத்திய திஸ் மூமென்ட் என்ற ஆல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கிதார் கலைஞர் ஜான் மெக்லாக்லின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், தாள கலைஞர் வி.செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 8 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த கிராமி விழாவில், சக்தி இசைக்குழு தவிர, மற்ற கலைஞர்களான சூசானா பாக்கா, பொகாண்டே, பர்னா பாய் மற்றும் டேவிடோ ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டனர்.
கடுமையான போட்டி காணப்பட்டது. அதையெல்லாம் மீறி, சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை சக்தி குழு பெற்று சாதனை படைத்தது. திஸ் மூமென்ட் ஆல்பம் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வெளியானது. சக்தி இசைக்குழுவில் இடம்பெற்ற ஒவ்வொரு இசைக்கலைஞர் தங்கள் சொந்த ஊரில் இருந்து தங்கள் பகுதியை ரெக்கார்டிங் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. சக்தி என்பது இந்திய பாரம்பரிய இசையை ஜாஸ் இசையுடன் கலந்த ஓர் இசைக்குழு. 1973ம் ஆண்டு ஜாஸ் கிதார் கலைஞரான ஜான் மெக்லாக்லின் என்பவரால் கலைநயமிக்க பாரம்பரிய இந்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து நிறுவப்பட்டது, இந்த இசைக்குழு மேற்கத்திய மரபுகளையெல்லாம் தாண்டி இசையை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்காற்றியது. 1976ம் ஆண்டு சக்தி, 1977ம் ஆண்டு ஏ ஹேண்ட்புல் பியூட்டி (1977), நேச்சுரல் எலிமென்ட்ஸ் உள்ளிட்ட பல ஆல்பங்களை இசைக்குழு வெளியிட்டது, கடந்த ஆண்டு, சக்தி இசைக்குழு தனது 50வது ஆண்டு விழாவை 27 நகரங்களில் ஒரு விரிவான சுற்றுப்பயணத்துடன் கொண்டாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் அமெரிக்கா முழுவதும் 17 நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
The post சர்வதேச அளவில் அசத்திய இந்திய இசை: சங்கர் மகாதேவன் உள்பட சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.