×

ஐபிஎல் 2022 சீசனின் Fastest Delivery Of Match விருதினை பெற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் Fastest Delivery Of Match விருதினை பெற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்துவீசிய நிலையில் தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது. தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவர் அதிகபட்சமாக இந்த தொடரில் 157 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்தார். இவரை இந்திய அணியில் தேர்வு செய்ய கூறி பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க 20 ஓவர் தொடருக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார். உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது, தவறினால் அவர் காயங்களுக்கு ஆளாக நேரிடும். ஒரு எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு தேவைப்படும் ஆதரவு அவருக்கு வழங்கப்படும் என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் அவரது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். …

The post ஐபிஎல் 2022 சீசனின் Fastest Delivery Of Match விருதினை பெற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை appeared first on Dinakaran.

Tags : Sunrisers Hyderabad ,Umran Malik ,IPL 2022 ,Mumbai ,IPL ,
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...