×

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அச்சம்

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இங்கு பேருந்து நிலையம், பள்ளி கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர்  பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக பேருந்து நிலையம் மற்றும் தெருக்களில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் தெருக்களில் குழந்தைகள் விளையாடவும், இரவு நேரங்களில் தெருக்களில் வந்து செல்ல பெண்கள், முதியோர் அச்சமடைகின்றனர். மேலும், பேருந்து நிலையம், கடைகள் முன்பு பன்றிகள் அதிக அளவில் சுற்றி வருவதால் பயணிகள், வியாபாரிகள்  அவதிப்படுகின்றனர். தெரு நாய்கள் குழந்தைகளை கடித்து  கொதறும்  நிலை இருப்பதால், பேரூராட்சி நிர்வாகம் நாய்கள் பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Bodaturpet Municipality ,Pallipattu ,Pallipatta ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே லவா ஆற்றில் ராட்சத...