- சென்னை
- எஸ்.ராஜரத்தினம்
- டி.கெபாஜோன்ஸ்
- ஜே4 ஸ்டுடியோ
- யுவன் ஷங்கர் ராஜா
- ஜே. சுரேஷ்
- கங்கை அமரன்
- ஸ்னேகன்
- தன்வீர் மொய்தீன்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: ஜெ 4 ஸ்டுடியோ சார்பில் எஸ்.ராஜரத்தினம், டி.ஜெபஜோன்ஸ் தயாரித்துள்ள படம், ‘மிஸ்டர் ஜு கீப்பர்’. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஜெ.சுரேஷ் இயக்கியுள்ளார். கங்கை அமரன், சினேகன் பாடல்கள் எழுதியுள்ளனர். தன்வீர் மொய்தீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி நடிகர் புகழ், கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இம்மாத இறுதியில் திரைக்கு வரும் இப்படம் குறித்து புகழ் கூறியதாவது:
இந்த படத்தில் புலிக்குட்டியுடன் நடித்தேன். ஒரு காட்சியில் புலிக்கு நிஜமாகவே கோபம் வந்தது. என்னைக் கொன்றுவிடுமோ என்ற பயத்தில் நடுங்கினேன். அப்போது பயிற்சியாளர் ஓடி வந்து புலியை அடக்கி என்னைக் காப்பாற்றினார்.
மலைப்பகுதியில் வசிக்கும் அப்பாவி இளைஞன், பூனை என்று நினைத்து புலிக்குட்டியை வளர்க்கிறான். இதனால் அவன் சந்திக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறான் என்றும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமாக சொல்லும் இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கிராமத்துப் பெண்ணாக வரும் ஷிரின் கான்ச்வாலா, என் மனைவியாக நடித்துள்ளார். நிஜ புலியை நடிக்க வைப்பதற்காக அந்தந்த நாட்டு அரசாங்கத்திடம் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி வாங்கிய படக்குழுவினர், அனைத்து விதிகளையும் பின்பற்றி படப்பிடிப்பு நடத்தியதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. தாய்லாந்து மொழியில் ‘நாய் சாவ்ன் சத்வ்’ என்ற பெயரிலும், மலாய் மொழியில் ‘என்சிக் பென்ஜகா ஜு’ என்ற தலைப்பிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.
The post தாய்லாந்து மொழியில் டப்பாகும் படத்தில் புகழ், ஷிரின் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.