×

ரஷ்யா செல்கிறது தக் லைஃப் படக்குழு

 

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்போது ரஷ்யா, சைபீரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் செல்ல உள்ளனர். அங்கு பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக பட வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த படம் முழுவதும் கமல்ஹாசன் தாடியுடன் தோன்றுவார் என்றும் ரஷ்யாவில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

The post ரஷ்யா செல்கிறது தக் லைஃப் படக்குழு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thug ,Russia ,Chennai ,Kamal Haasan ,Mani Ratnam ,Russia, Siberia ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கமலுடன் இணைகிறார் பங்கஜ் திரிபாதி