×

குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக கொடுங்கையூரில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாதவரம் பால் பண்ணை சாலையில் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளுக்காக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குழாய்கள் மாற்றி இணைக்கும் பணிகள் வரும் 23ம் தேதி காலை 8 மணி முதல் 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, பகுதி-3க்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன்மேடு, பகுதி-4க்கு உட்பட்ட கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பெரம்பூர் (பகுதி), வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை மற்றும் பகுதி-6க்கு உட்பட்ட பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு 24ம் தேதி மாலை முதல் இப்பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள பகுதி-3 பொறியாளரை 8144930903 என்ற எண்ணிலும், பகுதி-4  பொறியாளரை 8144930904 என்ற எண்ணிலும், பகுதி-6 பொறியாளரை 8144930906 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக கொடுங்கையூரில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodungayur ,Chennai ,Chennai Drinking Water Board ,Metro Railway Station ,Mathavaram Milk Farm Road ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்