- ஏ ஆர் ரஹ்மான்
- சென்னை
- ஏ.ஆர்
- ஏ. ஆர். ரகுமான்
- பம்பாய் பாக்யா
- சகுல் ஹதே
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: ‘லால் சலாம்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்றிருக்கும் ‘திமிறி எழுடா’ பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பாம்பே பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரது குரல்கள் AI தொழில்நுட்பம் மூலமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த சில காலமாகவே AI பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் ‘லால் சலாம்’ பட பாடல்களில் மறைந்த பின்னணி பாடகர்களின் குரல் AI மூலமாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் விமர்சனத்துக்குள்ளானது.
இது தவறான முன்னுதாரணமாகலாம் என நெட்டிசன்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து கூறத் தொடங்கினர். இந்நிலையில், இது குறித்து விளக்கம் கொடுக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், ‘மறைந்த பாடகர்களான பாம்பே பாக்யா மற்றும் சாகுல் ஹமீதின் குரலை AI மூலம் பயன்படுத்துவதற்கு அவர்களது குடும்பத்தினரிடமிருந்து முறையான அனுமதி பெற்றேன். அவர்களுடைய குரல் பயன்படுத்த தேவையான சன்மானத்தை கொடுத்தேன். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் அதனால் அச்சுறுத்தலோ பாதிப்போ இருக்காது’ என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
The post மறைந்த பாடகர்களின் குரலை AI மூலம் பயன்படுத்தியது ஏன்? சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.