சென்னை: பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறார். மழையால் தக்காளி செடிகள் அழுகத் தொடங்கியுள்ளன. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 100-ஐ தொட்டுள்ளது. இந்த விலையேற்றம் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளிக்கு ரூ. 10 உயர்த்தப்பட்டதால் ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள சில்லரை வியாபாரக் கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர், மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படும். நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 65 பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி கிடைக்கும். தேவையின் அடிப்படையில் நியாய விலை கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். …
The post தாறுமாறாக உயரும் தக்காளி விலை!: பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை.. அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்..!! appeared first on Dinakaran.