×

திரைத்துறை வணிகத்தில் இந்தியா முன்னேற்றம்: கேன்ஸ் பட விழாவில் மத்திய அமைச்சர் பெருமிதம்

கேன்ஸ்: 75வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரையுலகினருடன் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேசியதாவது: இந்தியாவும், பிரான்சும்  தூதரக  உறவுகளின் 75வது ஆண்டினைக்  குறிக்கும் இந்த வேளையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக இந்தியா கவுரவத்துக்குரிய நாடு என்ற முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தற்போது ஊடகமும், பொழுதுபோக்குத் துறையும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகின்றன. இந்தியாவிலும், உலகம் முழுவதும் திரைப்பட வணிகமும்,  உருவாக்கத் தன்மையும், நுகர்வும், விநியோகமும் மாறி வருவதை நாம் காண்கிறோம். சில மதிப்பீடுகளின்படி இந்தியாவின் ஓடிடி சந்தை 2023ம் ஆண்டுவாக்கில் 21 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ஆண்டு வருவாய் ரூ.12,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்  துறையின் வணிகத்தில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.  இது விரைவாக வளர்ந்து வரும் துறை என்ற முறையில், 2025க்குள் ஆண்டுக்கு ரூ.24 ட்ரில்லியன் வருவாயை உருவாக்கி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

The post திரைத்துறை வணிகத்தில் இந்தியா முன்னேற்றம்: கேன்ஸ் பட விழாவில் மத்திய அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : India ,Union minister ,Cannes Film Festival ,CANNES ,75th Cannes Film Festival ,Aishwarya ,Perumitham ,Dinakaran ,
× RELATED சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம்...