×

தேனியில் வரதட்சணை கேட்டு மருமகள்,பேரனுக்கு தீ வைத்த மாமனார்: குழந்தை பலியான நிலையில் மருமகள் மருத்துவமனையில் அனுமதி

தேனி: தேனி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு மருமகள் மற்றும் பேரக்குழந்தையை மாமனார் கெரோசினை ஊற்றி தீ வைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தமபாளையம் அருகே நாராயதேவன்பட்டியை சேர்ந்தவர்கள் அருண்பாண்டியன்- சுகப்பிரியா தம்பதி. இவர்களுக்கு யாகத் என்ற ஒருவயது ஆண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்த, கடந்த 2 வருடங்களாக சுகப்பிரியாவிடம் அவரது மாமனார் பெரியகருப்பன், அடிக்கடி வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று இரவு மதுபோதையில் வந்த பெரியகருப்பன், சுகப்பிரியாவிடம் வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கெரோசினை எடுத்து, மருமகள் சுகப்பிரியா மற்றும் பேரக்குழந்தை யாகத் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் குழந்தை யாகத் உயிரிழந்த நிலையில், தீக்காயங்களோடு சுகப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெரியகருப்பனை கைது செய்தனர்.    …

The post தேனியில் வரதட்சணை கேட்டு மருமகள்,பேரனுக்கு தீ வைத்த மாமனார்: குழந்தை பலியான நிலையில் மருமகள் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Theni district ,Mamanar Kerosin ,
× RELATED அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை