×

காவிரி பாசன மாவட்டங்களில் தூர் வாரும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைய நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியாக உள்ளது. இதனால் நடப்பாண்டிலும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அடுத்த சில நாட்களில் காவிரி கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடைவதை உறுதி செய்ய கடைமடை பாசன பகுதிகள் வரை தூர்வாரப்பட வேண்டியது மிகவும் அவசியம். எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய்களை தூர் வாரும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். மேலும் மேட்டூர் அணை திறப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு முன்கூட்டியே வெளியிட வேண்டும். அதேபோல், குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரங்கள் உள்ளிட்டவையும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post காவிரி பாசன மாவட்டங்களில் தூர் வாரும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Anbumani ,Chennai ,Tamil Nadu government ,Pamaka Ilajanarani ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...