×

கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே கழிவறையில் சிறுநீர் கழிக்க தவறுதலாக வைத்த வாஷ்பேசின்: மீண்டும் மாற்றியமைப்பு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பஸ்ஸ்டாப் அருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையில் பீங்கான் கோப்பைக்கு (செராமிக்ஸ்) ஓட்டலில் பயன்படுத்தும் வாஷ்பேஷன் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அருகில் இப்பகுதியில் ஏராளமான அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், நீதிமன்றம் என பல அலுவலகங்கள் உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் கிருஷ்ணராயபுரம் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் தாய்மார்கள், பள்ளி மற்றும் கல்லூரி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கரூர்- திருச்சி செல்வதற்கும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வேலைகளுக்கு செல்ல இங்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர்.இங்கு பஸ் ஏறக் காத்திருக்கும் பொதுமக்கள் அவசரமாக இயற்கை உபாதை கழிப்பதற்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் கடந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பஸ் ஸ்டாப் அருகே கழிப்பறை வசதி கட்டித் தர தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பஸ் ஸ்டாப் அருகே புதியதாக கட்டிய கழிப்பறையில் சிறுநீர் கழிப்பதில் ஆண்கள், பெண்கள் என இரண்டு தரப்பினருக்கும் தனித்தனியே கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆண்களுக்கான சிறுநீர் கழிப்பிடத்தில் பீங்கான் கோப்பைக்கு பதிலாக ஓட்டல் மற்றும் வீடுகளில் சமையல் அறைகளில் பயன்படுத்தும் வாஷ்பேசின் வைக்கப்பட்டுள்ளது.இதனால் அதிக தொகை செலவிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத வகையில் இந்த வாஷ்பேஸினில் சிறுநீர் கழிப்பதற்கு பயன்படுத்த வைத்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக வாஷ்பேஷன் மாற்றி புதிய கழிவறை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பேரூராட்சி செயல்அலுவலரை தொடர்புகொண்டு பேசியதில் தவறுதலாக வைக்கப்பட்ட வாஷ்பேஷனுக்கு பதில் புதிய பீங்கான் சிறுநீர் கழிப்பான் மாற்றியமைக்கப்பட்டு தண்ணீர் வசதிக்கு உரிய ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்….

The post கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே கழிவறையில் சிறுநீர் கழிக்க தவறுதலாக வைத்த வாஷ்பேசின்: மீண்டும் மாற்றியமைப்பு appeared first on Dinakaran.

Tags : Washbasin ,Krishnarayapuram ,Architectural Administration ,BusStop ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...