×

புதுக்கோட்டை மாவட்டம் துலையனுர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: இருவர் பணியிடை நீக்கம்: ரூ.35 லட்சம் அபராதம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் துலையனுர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல்மூட்டைகள் சேதம் அடைந்துள்ளது. இளநிலை தர ஆய்வாளர் ரவி, தரக்கட்டுப்பாட்டு உதவியாளர் சரவணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருவருக்கு ரூ 35 லட்சம் அபராதம் விதித்து சிவில் சப்ளை கார்பொரேஷன் மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். உரிய பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகளை வைத்திருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவாசியிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 4,120 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது.  காவிரி டெல்டாவின் கடைமடி பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விளங்கி வருகிறது. குறிப்பாக 2 லட்சம் ஏக்கருக்கு மேலே வருடம் முழுவதும் நெல் பயிரிடபடுகிறது. திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நெல் விளைவிக்கபடுகிறது. இந்தாண்டு பருவமழை அதிகமாக வந்ததால் நெல் விளச்சல் அதிகமாக வந்தது. இதனிடையே விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்ய ஆங்காங்கே நேரடி அரசு கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய்  இல்லாத காரணத்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது. ஆய்வுக்காக சிவில் சப்ளை கார்பொரேஷன் அதிகாரிகள் சென்ற போது 4,120 நெல் மூட்டைகள் வீணானது தெரிய வந்தது. அது எப்படி வீணானது என்று அதிகாரிகள் கேட்டதும் மழையில் நனைந்து வீணாகிவிட்டது என்று கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து அதிகாரிகள்  அறிக்கையாக தயார் செய்து  சிவில் சப்ளை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி-க்கு அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து இளநிலை தர ஆய்வாளர் ரவி, தரக்கட்டுப்பாட்டு உதவியாளர் சரவணன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்தும் மேலும் ரூ.35 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முழுவதும் நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து வருவதாக ஒரு குற்றசாட்டு எழுந்துள்ளது.  …

The post புதுக்கோட்டை மாவட்டம் துலையனுர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: இருவர் பணியிடை நீக்கம்: ரூ.35 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai District Dhulaiyanur Govt ,Pudukottai ,Pudukottai District ,Dulaiyanur government ,Pudukottai District Dulaiyanur Govt ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...