- பாக்யராஜ்
- சென்னை
- மு.முத்து
- சாத்விக் வர்மா
- ஜாக் ராபின்சன்
- ரஹீம்
- நயன் கரிஷ்மா
- அம்ரிதா ஹல்தார்
- மஞ்சீரா
- கொளஞ்சி குமார்
- பாலமுரளி பாலு
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: ‘திறந்திடு சீசே’ படத்தை தொடர்ந்து எம்.முத்து எழுதி இயக்கியுள்ள படம், ‘சிக்லெட்ஸ்’. சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா நடித்துள்ளனர். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். எஸ்எஸ்பி பிலிம்ஸ் ஏ.சீனிவாசன் குரு தயாரித்துள்ளார். ஸ்வர்ணா கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ெபாறுப்பேற்றுள்ளார். வரும் பிப்ரவரி 2ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகும் இப்படத்தை தமிழ்நாட்டில் தமிழ் சினி கார்ப்பரேஷன் சார்பில் எஸ்.நந்தகோபால், தெலுங்கில் எம்ஜி மூவிஸ் சார்பில் எம்.அச்சு பாபு ஆகியோர் வெளியிடுகின்றனர். இப்படம் குறித்து எம்.முத்து கூறியதாவது:
பெற்றோர் தங்கள் வாரிசுகள் வாழ்க்கையில் தோற்கக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அதை வாரிசுகளிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். ‘எப்படி வேண்டுமானாலும் வாழு. ஆனால், வாழ்க்கையில் நீ சிறந்தவனாக வெற்றி பெற வேண்டும்’ என்று சொல்லிப் பாருங்கள். பிள்ளைகளின் மனதிற்குள் மாற்றம் ஏற்படும். இக்கருத்தை வலியுறுத்தும் இந்தப் படத்துக்கு பிரபலமானவரின் பின்னணி குரல் அவசியம் என்பதை உணர்ந்து கே.பாக்யராஜை அணுகி னோம். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சில நிறை, குறைகளை சுட்டிக் காட்டினார். இரண்டரை மணி நேரம் ஓடிய படம், அவர் சொன்ன குறைகளை நீக்கிய பிறகு 2 மணி நேரமாக மாறியது. இப்படத்தின் கிளைமாக்ஸ், 3 கேரக்டர்களுக்கும் நியாயப்படுத்தும் வகையில் இருக்கும். தயாரிப்பாளருக்கும், கே.பாக்யராஜுக்கும் கிளைமாக்ஸ் பிடித்திருந்தது. படம் வெளியான பிறகு இது மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்.
The post பாக்யராஜால் சிக்லெட்ஸ் காட்சிகள் கட்: இயக்குனர் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.