×

காதலனை அறிவித்தார் சாய் பல்லவியின் தங்கை

சென்னை: சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர், பூஜா கண்ணன். சாய் பல்லவியின் தங்கையான அவர், தனது காதலனை இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர் களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா இயக்குனராக அறிமுகமான படம், ‘சித்திரைச் செவ்வானம்’. இதில் சமுத்திரக்கனி, வித்யா பிரதீப், பூஜா கண்ணன் நடித்தனர். நேரடியாக டி.வியில் வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு பூஜா கண்ணனுக்கு புதுப்பட வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, டி.வி நிகழ்ச்சிகள் மற்றும் குறும்படங்களில் நடித்தார். முன்னதாக ஏ.எல்.விஜய் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பூஜா கண்ணன் வெளியிட்டுள்ள பதிவில், ‘இவர்தான் வினீத். என் கிரைம் பார்ட்னர். இப்போது என் வாழ்க்கை பார்ட்னரும் கூட’ என்று தனது காதலனை அறிமுகப்படுத்தி வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண தேதி குறித்து பூஜா கண்ணன் அறிவிக்கவில்லை.

The post காதலனை அறிவித்தார் சாய் பல்லவியின் தங்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sai Pallavi ,Chennai ,Pooja Kannan ,Stunt Silva ,Samuthirakani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரூ.10 கோடி சம்பளம் கேட்ட சாய் பல்லவி