×

மண்டல கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்களுக்கு தடை: மாநகராட்சி உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு

சென்னை: மண்டல கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் கலந்து கொள்ள கூடாது என்ற  சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு சிபிஐ(எம்) வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: அண்மையில் சென்னை மாநகராட்சி, பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் நிலைக்குழு கூட்டங்களுக்கோ, மண்டல கூட்டங்களுக்கோ வருகை தரக் கூடாது என்ற முடிவை எடுத்திருப்பதாக ஊடக செய்தி வெளிவந்தது. இம்முடிவைப் பாராட்டுகிறோம். அனைத்து மன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்கள் சுயமாக இயங்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதும், அவர்களது பணிகளை கணவன் உள்ளிட்ட குடும்பத்தினர் செய்வதை தடுப்பதும் மிக முக்கியமானது எனக் கருதுகிறோம். பெயருக்கு அவர்களை தேர்ந்தெடுத்துவிட்டு, அவர்களது பணிகளை எல்லாம் பினாமியாக தந்தையோ, கணவனோ, மற்றவர்களோ செய்வார்கள் என்றால் அந்நிலையை ஒருபோதும் ஏற்கக்கூடாது. ஒரு பகுதி பெண் கவுன்சிலர்கள் மட்டுமே சுயேச்சையாக செயல்படுகிற இன்றைய சூழலை வலுப்படுத்தி விரிவாக்க வேண்டும். ஆண் கவுன்சிலர்களின் உறவினர்கள் வருவதில்லை, வந்தாலும் அனுமதி இல்லை. அப்படியானால் இந்நிலைக்கு, பெண்கள் தனித்து இயங்கும் திறன் அற்றவர்கள் என்கிற ஆணாதிக்க கண்ணோட்டமே காரணமாக உள்ளது. இந்த மாயை உடைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post மண்டல கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்களுக்கு தடை: மாநகராட்சி உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,CPI ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...