×

வத்திராயிருப்பு அருகே ரூ.65 லட்சம் டம்மி நோட்டுகளுடன் 5 பேர் கைது

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே டம்மி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரம் மகாராஜபுரம் ரோட்டில் உள்ள லிங்கம் கோயில் சந்திப்பில் வத்திராயிருப்பு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தும் டம்மி 500 ரூபாய் நோட்டுகள் ரூ.65 லட்சத்து 85 ஆயிரம்  இருந்தது. மேலும் ரூ.36 ஆயிரத்து 500 நல்ல ரூபாய் நோட்டுகளும் இருந்தன. இதையடுத்து காரில் இருந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சஜித்குமார் (45), கூடலூர் கனகசுந்தரம் (55), வத்திராயிருப்பு கொடிக்குளம் பூமிராஜ் (30), குபேந்திரன் (30), கூமாபட்டி பாலமுருகன் (30) ஆகியோரிடம் எஸ்பி மனோகரன் விசாரணை செய்தார். இதில், நல்ல நோட்டுகளுடன் டம்மி நோட்டுகளை கலந்து புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். …

The post வத்திராயிருப்பு அருகே ரூ.65 லட்சம் டம்மி நோட்டுகளுடன் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vathirayiru ,Vatharayirupu ,Virudhunagar district ,Vathirairipu ,Dinakaran ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...