×

மாடம்பாக்கத்தில் பகுதி நேர நூலகம் சீரமைப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் பகுதி நேர நூலகம் சீரமைப்பு செய்யப்பட்டு, வாசகர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் கிராமத்தில் பகுதி நேர நூலக கட்டிடம் பல ஆண்டுகளாக இயங்கியது. கடந்த 2019ம் ஆண்டு உருவான கொரோனா தொற்று காரணமாக நூலக கட்டிடம் மூடப்பட்டது. இதையடுத்து, உரிய பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் கிடந்தது. இந்தவேளையில், கொரோனா தொற்று குறைந்ததால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.இந்நிலையில், பல ஆண்டுகளாக பயன்படுத்தி, பாழடைந்து கிடந்த பகுதி நேர நூலகம் கட்டிடத்தை புதுப்பித்து தரும்படி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தனது சொந்த செலவில் நூலக கட்டிடத்தை சீரமைத்து, வர்ணம் பூசி நேற்று முதல் வாசகர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி நூலக கட்டிடத்தை திறந்து வைத்து, நூலக கட்டிடம் வளர்ச்சிக்காக ரூ.7,020 நிதி வழங்கினார். இதேபோல், நூலகர்கள், புரவலர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் ரூ.14 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. இதில், நூலகர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில், வார்டு உறுப்பினர்கள் ஆயிஷா சித்திக், அபுபக்கர், விமலா ஏழுமலை, சத்யநாராயணன், ஊராட்சி செயலர் மொழியின், சமூக ஆர்வலர் அரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்….

The post மாடம்பாக்கத்தில் பகுதி நேர நூலகம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Madambakkam ,Kootuwancheri ,Gooduancheri ,Mambakkam ,Dinakaran ,
× RELATED சென்னை அருகே வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல்