×

கிரிப்டோ தொடர்பான விளம்பரங்களில் விளையாட்டு வீரர்கள் போன்ற இந்திய பிரபலங்கள் இடம்பெறக் கூடாது : செபி மூக்கணாங் கயிறு!!

மும்பை : இந்தியாவில் உள்ள பிரபலங்கள் கிரிப்டோ தயாரிப்புகளை ஆதரிக்கும் விளம்பரங்களில் இடம்பெறக் கூடாது என்று இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியமான செபி ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கிரிப்டோவின் பல்வேறு அம்சங்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்  எழுப்பிய கேள்விகள் குறித்து செபி தனது கருத்தை கடந்த மாதம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அளித்துள்ளது. கிரிப்டோ தொடர்பான விளம்பரங்களில் விளையாட்டு வீரர்கள் போன்ற இந்திய பிரபலங்கள் இடம்பெறக் கூடாது என்று செபி அதில் பரிந்துரைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற விளம்பரங்களால் பிரச்சனை எழும்போது விளம்பரத்தில் நடிக்கும் முக்கிய நபர் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கிரிப்டோ தயாரிப்பு பரிவர்த்தனைகள் பெமா, பிஎம்எல்ஏ போன்ற இந்திய சட்டங்களை மீறியதற்காக வழக்கு தொடர் வழிவகுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்களை விளம்பரங்களில் இடம்பெற செய்யும் மாறு நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு செபி ஆலோசனை அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு விளம்பரம் தவறானது என்று கண்டறியப்பட்டால் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதனை நிறுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கலாம் என்று அபராதம் விதிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தவறான விளம்பரத்திற்காக அதில் இடம்பெற்ற பிரபலங்களிடம் முதல்முறை 10 லட்சம் ரூபாயும் விளம்பரம் குறித்து புகார்கள் தொடர்ந்தால் 50 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அபராதத்திற்கு உள்ளாகும் பிரபலங்கள் 3 வருடங்கள் வரை வேறு எந்த தயாரிப்பு விளம்பரத்திலும் இடம்பெறுவதை தடை செய்யலாம் என்றும் செபி பரிந்துரை செய்துள்ளது.  …

The post கிரிப்டோ தொடர்பான விளம்பரங்களில் விளையாட்டு வீரர்கள் போன்ற இந்திய பிரபலங்கள் இடம்பெறக் கூடாது : செபி மூக்கணாங் கயிறு!! appeared first on Dinakaran.

Tags : Sebi Mookanang ,Mumbai ,India ,Sebi Mookanang Rope ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு