×

நீண்ட போராட்டத்திற்கு பிறகு நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய ஒருவரின் உடல் மீட்பு: எஞ்சிய 2 பேரை மீட்கும் பணி தீவிரம்..!

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 3 பேரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், பாளை அருகே முன்னீர்பள்ளத்தை அடுத்த அடைமிதிப்பான் குளத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இரவு, பகலாக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குவாரியில் பாறைகளை வெட்டி எடுத்து, அவைகளை இயந்திரங்கள் மூலம் ஜல்லிகளாக உடைப்பது, ஜல்லிகளை சுக்காக அரைத்து கிரஷர் பொடி தயாரிப்பது, எம். சாண்ட் உற்பத்தி செய்வது ஆகியவை இந்த குவாரிகளில் நடைபெறும் பணிகளாகும். நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த குவாரியில் 350 அடி ஆழத்தில் பொக்லைன் மூலமும், வெடிகள் மூலமும் பாறைகளை உடைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக 2 லாரிகள், 3 ஹிட்டாச்சி இயந்திரங்கள் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை ஒன்று உருண்டு கல்குவாரிக்குள் விழுந்தது. இதில் 6 தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். அதில் 2 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இதனிடையே நேற்று மாலை இடுமாடுகளில் சிக்கியவர்களில் ஒருவரை மீட்ட போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் பலியானார். தொடர்ந்து ஈடுபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. காலை முதலே நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மிகுந்த சவால்களுக்கு இடையே மீட்பு பணியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களில் ஒருவரது உடல் கட்னுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 300 அடி ஆழத்தில் டிப்பர் லாருக்கு அடியில் சடலமாக கிடந்த உடலை பார்த்த அதிகாரிகள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மற்ற இருவரின் நிலை என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும் என் ஏதிர்பார்க்கப்படுகிறது. …

The post நீண்ட போராட்டத்திற்கு பிறகு நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய ஒருவரின் உடல் மீட்பு: எஞ்சிய 2 பேரை மீட்கும் பணி தீவிரம்..! appeared first on Dinakaran.

Tags : paddy Kalgwari ,Paddy ,Kalguari ,Paddy district ,Pala ,Prepallam ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...