×

சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கோபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  என்பவர் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மாலை வேலையில் அவரின் 14 வயது மகள் வருவாள். அப்போது பானிபூரி சாப்பிட வந்த செங்குன்றம் அடுத்த பொத்தூர் பெரியார் நகரை சேர்ந்த முகமது அலி(20), என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. அதன் மூலம் அவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை‌ தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அடிக்கடி சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறினாள். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார் முகமது அலியை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்….

The post சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Valiber ,Boxo ,Kobi ,Paniburi ,Vanarapette-Thiruvotteur highway ,Dinakaran ,
× RELATED கோவையில் போக்குவரத்து விதியை...