×

முட்டுக்காடு நில மோசடி வழக்கில் எழுத்தர் உள்பட இருவர் கைது

சென்னை: முட்டுக்காடு நில மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் பிரபல கிரானைட் நிறுவனத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் 88 சென்ட் நிலத்தை மதுராந்தகத்தை சேர்ந்த கும்பல் ஒன்று போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயன்றது.இதையடுத்து, தாம்பரம் ெபருநகர காவல் ஆணையர் ரவி உத்தரவின் பேரில், இந்த மோசடிக்கு உதவியதாக திருப்போரூர் சார்பதிவகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய காசி (55)  என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த நில மோசடியில் போலி செட்டில்மெண்ட் ஆவணம் எழுதிக்கொண்ட மதுராந்தகத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (42) மற்றும் போலி ஆவணம் எழுதிக் கொடுத்த திருப்போரூர் சான்றோர் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (32) ஆகியோரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் போலி ஆவணங்கள் தயாரித்தல், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அத்து மீறி நுழைதல், சொத்தை அபகரிக்க முயலுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.  முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்….

The post முட்டுக்காடு நில மோசடி வழக்கில் எழுத்தர் உள்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muthukkadu ,Muthukadu ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...