×

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு: நீர்வளத்துறை புள்ளிவிவரம் வெளியீடு

சென்னை: நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டபணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதால் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நிலத்தடி நீரை பெருக்க அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்ட்டது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது.இவ்வாறு கடந்த மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் தமிழக முழுவதும் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகை, அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது….

The post தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு: நீர்வளத்துறை புள்ளிவிவரம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...