- சிரஞ்சீவி
- ஹைதெராபாத்
- சண்முகம்
- வஷிஸ்தா
- புற ஊதா படைப்புகள்
- விக்ரம்
- வம்சி
- பிரமோத்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
ஐதராபாத்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 156வது படம், அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. வசிஷ்டா, யு.வி கிரியேஷன்ஸ் வழங்கும் பேண்டஸி படமான இதற்கு ‘விஸ்வம்பரா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விக்ரம், வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த், மயூக் ஆதித்யா ஸ்கிரிப்ட் எழுதுவதில் உதவி யாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
ஸ்ரீசிவசக்தி தத்தா, சந்திரபோஸ் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், தற்செயலாக விழும் ஒரு மாயாஜாலப் பெட்டியை ஒருவர் பூட்ட, அந்தப் பெட்டி கருந்துளையின் வழியாகச் சென்று ஒரு சிறுகோள் மீது மோதி, பல இடையூறுகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு பூமியை வந்தடைகிறது. இது ஒரு பெரிய ஹனுமான் சிலையுடன் காட்டப்பட்டுள்ளது. பூமியில் மோதும்போது ஒரு பள்ளம் தோன்றுகிறது. ஆனால், மாயப்பெட்டிக்கு எதுவும் நடக்கவில்லை. பிறகு ‘விஸ்வம்பரா’ என்ற தலைப்பு வெளியாகிறது. இக்காட்சி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
The post சிரஞ்சீவியின் 156வது படம் விஸ்வம்பரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.