×

பொதுப்பணி துறையில் 167 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை:தமிழக பொதுப்பணி துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் வெளியிட்ட உத்தரவு:சென்னை மருத்துவ பணிகள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் மந்தராக்‌ஷி சென்னை மருத்துவ பணிகள் உதவி செயற்பொறியாளராகவும், சென்னை தரக்கட்டுபாட்டு உபகோட்ட உதவி பொறியாளர் ஜெயந்தி சென்னை டிஎம்ஸ் வளாக கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளராகவும்,  மருத்துவ பணிகள் கோட்டம்-2 உதவி பொறியாளர் சோமசுந்தர் காஞ்சிபுரம் கட்டுமான கோட்ட உதவி செயற்பொறியாளராகவும், சென்னை கட்டுமான பிரிவு உபகோட்ட உதவி பொறியாளர் சுடலைமுத்து சென்னை கட்டுமான கோட்ட உதவி செயற்பொறியாளராகவும், தலைமை செயலக உபகோட்ட உதவி பொறியாளர் கோவிந்தன் தலைமை செயலக உபகோட்ட உதவி செயற்பொறியாளராகவும், சென்னை தொழில்நுட்ப கல்வி உபகோட்ட உதவி பொறியாளர் பாஸ்கரன் பூந்தமல்லி கட்டுமான பிரிவு உபகோட்ட உதவி பொறியாளராகவும், சென்ைன எழும்பூர் உபகோட்ட உதவி பொறியாளர் சுந்தரேசன்  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை உபகோட்ட உதவி பொறியாளராகவும், மதுரை கட்டுமான பிரிவு உபகோட்ட உதவி பொறியாளர் அழகர்சாமி சென்னை தென்கிழக்கு உபகோட்ட உதவி செயற்பொறியாளராகவும், தலைமை செயலக உபகோட்ட இளநிலை பொறியாளர் முரளி திருத்தணி உபகோட்ட உதவி செயற்பொறியாளராகவும், சென்னை கட்டுமான பிரிவு உயர்நீதிமன்ற வளாக இளநிலை பொறியாளர் சுப்பையா கட்டுமான பிரிவு தொழில்நுட்ப நேர்முக உதவியாளராவும் என மாநிலம் முழுவதும் 167 பேருக்கு உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்படுகிறது….

The post பொதுப்பணி துறையில் 167 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Public Works Department ,Principal ,Chief Engineer ,Viswanath ,Chennai Medical Works Monitoring Engineer Office ,
× RELATED செந்தில் பாலாஜி தொடர்ந்த புதிய...