×

கவியருவி திறக்கப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணை, கவியருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் மட்டுமின்றி கோவை, ஈரோடு, சென்னை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆழியாறு மற்றும் வால்பாறைக்கு செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கவியருயின் நீர்பிடிப்பு பகுதிகளான கவர்க்கல், சக்தி எஸ்டேட் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், அருவிகளில் தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், கடந்த ஜனவரி 13ம் தேதி கவியருவி மூடப்பட்டு, தற்போது 4 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.இதனால், கோடை விடுமுறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் கவியருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே கவியருவிக்கு தண்ணீர் வரும் நிலை உள்ளதால், மழையை எதிர்பார்த்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காத்து கிடக்கின்றனர்….

The post கவியருவி திறக்கப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kaviaruvi ,Anaimalai ,Aliyar Dam ,Western Ghats ,Pollachi ,
× RELATED ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய...