×

நன்னிலத்தில் வாய்க்கால்களில் தூர்வாரும் பணி

நன்னிலம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்ட பொதுப்பணித்துறை எல்லைக்கு உட்பட்ட ஏ பிரிவு மற்றும் பி பிரிவு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் கருதி வரும் நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏ பிரிவு வாய்க்கால்கள் மற்றும் பி பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தூர் வாரும் பணி என்பது, வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாய்க்கால்கள் அகலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது. நன்னிலம் உட்கோட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏ பிரிவு மற்றும் பி பிரிவு வாய்க்கால்களில், 336.30,, நீளத்திற்கு, 33 வாய்க்கால்கள், 279.69 லட்சத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது. ஏ மற்றும் பி பிரிவு வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் நிலையில், விவசாயிகள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாருவதால், மழைக்காலங்களில், தங்களின் பயிர்கள், மழைநீர் தேங்கி பாதிக்காத வகையில், பாதுகாக்க வாய்ப்பாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பொதுப்பணித்துறையினர், தூர்வாரும் பணியை மேற்கொண்ட நிலையில், விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து, கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post நன்னிலத்தில் வாய்க்கால்களில் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Nannilam ,Public Works Department of ,Tiruvarur ,Nannilam Utkota ,Dinakaran ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு