×

இத்தாலி ஓபன் டென்னிஸ்; 1000வது வெற்றியுடன் பைனலில் ஜோகோவிச்

ரோம்: இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நம்பர் 1 வீராரான செர்பியாவின் ஜோகோவிச்(34), 5ம் நிலை வீரரரான நார்வேயின் காஸ்பர் ரூட்(25) உடன் மோதினார்.  இதில் 6-4,6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் இது அவருக்கு 1000வது வெற்றியாகும். இந்த இலக்கை எட்டிய 5வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். அமெரிக்காவின் ஜிம்மிகானர்ஸ் 1274, சுவிட்சர்லாந்தின் பெடரர் 1251, அமெரிக்காவின் இவான் லெண்டில் 1068, ஸ்பெயினின் நடால் 1051 வெற்றிகளுடன் முதல் 4இடத்தில் உள்ளனர். இத்தாலி ஓபனில் ஆடவரில் இன்று 7.30 மணிக்கு நடைபெறும் பைனலில், கிரீசின் சிட்சிபாசுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார். மகளிர் ஒற்றையர் இன்று மாலை 4.30 மணிக்கு பைனலில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக்- துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் மோதுகின்றனர். …

The post இத்தாலி ஓபன் டென்னிஸ்; 1000வது வெற்றியுடன் பைனலில் ஜோகோவிச் appeared first on Dinakaran.

Tags : Italian Open Tennis ,Djokovic ,Rome ,Italian Open ,Italy Open Tennis ,Dinakaran ,
× RELATED இத்தாலி ஓபன் டென்னிஸ் சபலெங்கா முன்னேற்றம்