×

அதிமுக முன்னாள் அமைச்சரின் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 11ம் வகுப்பு மாணவர் பலி: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா நவீனுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது வழக்கம். இந்த திருமண மண்டபத்தில் சமையல் செய்வதற்கு தனி இடம்  கீழே ஒதுக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து வழக்கம்போல் நேற்று திருமண மண்டபத்தில்  கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கியது. அப்போது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் மணமக்களை வாழ்த்திய பின்னர் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது உணவு பற்றாக்குறை காரணமாக கீழே உள்ள உணவை எடுப்பதற்கு சுமார் 4 பேர் லிப்ட்டில் ஏற்றி வந்தனர். அப்போது திடீரென லிப்ட் ரோப் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற  மூன்று பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டதையடுத்து பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கேட்டரிங் சர்வீஸ் வேலை பார்ப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சீத்தால் (19) என்பது ெதரியவந்தது. மேலும் இரண்டு பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் (21), ஜெயராமன் (25) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post அதிமுக முன்னாள் அமைச்சரின் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 11ம் வகுப்பு மாணவர் பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,minister ,Jayakumar ,Jayapriya Naveen ,Bedikuppam ,Kummidipoondi, Chennai ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...